நயன்தாராவின் 35வது பிறந்தநாளை அவருக்கு பிடித்த நியூயார்க் நகரில் கொண்டாட நயன்தாரா தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
சென்ட்ரல் பார்க்கில் விக்கியும், நயன்தாராவும் வாக்கிங் சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நயன் ரசிகர்கள் வாழ்றார்யா இந்த மனுஷன். இந்த தாடிக்காரருக்கு எப்படித் தான் அந்த லேடி செட்டாச்சுன்னு தெரியவில்லையே என்று சிலர் விமர்சிக்க , மற்ற சிலரோ எப்போ கல்யாணம் என கேள்வி எழுப்பியுள்ளனர் .