இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் தனது காதலி நயன்தாராவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வைத்திருப்பவர்.

தற்போது நயன்தாரா தனது கையில் அணிந்திருக்கும் மோதிரம் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

“விரலோடு உயிர் கூட கோர்த்து” என்று அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார் விக்கி.

விக்னேஷ் சிவன் வெளியிட்ட அந்த ரொமாண்டிக் புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் மார்பின் மீது நயன்தாராவின் கைகளையும், அவரது மோதிரத்தையும் வெளிப்படுத்துகிறது.

https://www.instagram.com/p/CM0gGr-hZT_/

[youtube-feed feed=1]