வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி!

Must read

 
சென்னை:
ழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர்  ‘வியம்நாடு வீடு’ புகழ் சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முதன் முதலாக வியட்நாம் வீடு படத்திற்கு திரைக்கதை வசனகர்த்தாவாக அறிமுகமானவர் சுந்தரம். அதைத்தொடர்ந்து வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து பல தமிழ் படங்களுக்கு வசனம் எழுதியவர் சுந்தரம். அவரது வசனத்திற்காக படம் ஹிட்டானது.  பெரும்பாலான சிவாஜிகணேசன் படத்துக்கு அவர் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். இதன் காரணமாக  சிவாஜி கணேசனின் ஆஸ்தான வசனகர்த்தாவாகத் திகழ்ந்தார்.
வியட்நாம் வீடு சுந்தரம் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 76. திநகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று மாலை நடிகர் சூர்யா நேரில் சென்று சுந்தரத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

More articles

Latest article