
சென்னை:
திரைப்பட திரைக்கதை வசனகர்த்தாவும், இயக்குநரும் நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று அதிகாலை சென்னையில் மறைந்தார்.
கே. சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1943ம் ஆண்டு பிறந்தார். திரைக்கதை எழுதுவதில் வல்லவரான இவர், பல பிரபல நடிகர்களின் படங்களில் பணிபுரிந்துள்ளார். சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கௌரவம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தார்.
73 வயதாகும் வியட்டாம் வீடு சுந்தரம், முதுமை காரணமாக இன்று அதிகாலை மறைந்தார்.
Patrikai.com official YouTube Channel