கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா.
பின்பு தெலுங்கிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி வித்யூலேகாவுக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு இவர் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இருவருமே 2019-ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்துள்ளனர். இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
https://www.instagram.com/p/CEj3l90HMdy/
இது தொடர்பாக வித்யூலேகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
“26.8.2020 அன்று நெருங்கிய சொந்தங்கள் சூழ எனது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்தது. இது எங்களுக்கான சிறிய வெளிச்சக் கீற்று. எங்களுக்குக் கிடைத்த அன்புக்கு நாங்கள் என்றும் நன்றியுடன் இருப்போம். நாங்கள் முகக் கவசங்கள் அணிந்தோம். புகைப்படங்கள் எடுக்கும்போது மட்டும் நீக்கினோம். (யாரும் கேட்பதற்கு முன் நானே சொல்லிவிட்டேன்). உங்கள் நல் வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி. சிறப்பான நாட்கள் இன்னும் வரவுள்ளன”.
இவ்வாறு வித்யூலேகா தெரிவித்துள்ளார்.