இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க , யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தி ‘பிங்க்’ திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அஜித்துடன் நடித்தது குறித்தும் வித்யா பாலன் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அஜித் குறித்து பேசிய வித்யா பாலன், ”அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டுள்ள ஒரு நடிகர் என் முன்னால் மிகவும் எளிமையாக நடந்துகொண்டிருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. நான் நடிப்பது அஜித் உடனா? அல்லது அஜித் மாதிரியான ஒரு ஆளுடனா என்ற சந்தேகம் கூட வந்தது. அஜித் அந்த அளவுக்கு எளிமையானவர். அவருடைய ‘தல’ என்ற ஒரு நிலையையும் அவரின் எளிமை குறித்தும் நான் அஜித்துடன் பேசினேன். அவர் வெட்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.