விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னியரசு, “அய்யமும்.. எதிர்பார்ப்பும்!” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், “மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. காதலும் வீரமும் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்தது. இதை மாணவர்களும் இளைஞர்களும் புரிந்து தான் போராடுகிறார்களா? அப்படியானால், காதலுக்கு எதிர்பபு தெரிவித்து தண்டவாளத்தில் படுகொலை செய்து சாதிவெறியாட்டம் போடுபவர்களுக்கு எதிராக இதே இளைஞர்கள் போராட வேண்டும்.
தமிழர்களை பிரித்து கூறுபோடும் இந்துத்துவத்தின் உட்கூறான சாதியத்தை நிலை நிறுத்துவதற்காக சாதி கவுரவ படுகொலைகளை நடத்தி அதை ஞாயப்படுத்தும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் போராட முன் வந்தால், தமிழர்களின் வீரமும் மானமும் உலகுக்கு முன் மாதிரியாக இருக்கும்.
இல்லையென்றால், ஏறுதழுவுதல் குறித்த வரலாற்று புரிதல் இல்லாமல் கூடுகிறார்களோ என்ற அய்யம் எழுகிறது!” என்று வன்னி அரசு எழுதியிருந்தார்.
இதற்கு ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர், எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.
அவர்கள் தெரிவிப்பதாதவது, “வன்னி அரசு, மாணவர்களின் போராட்டத்தில் ஜாதி பார்க்கிறாரா ? ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்து வந்த தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக் கட்டுவை மத்திய அரசு தடை செய்தது மூன்று வருடங்களாக பொறுத்திருந்த தமிழ்மக்கள் மாணவர்கள் பொறுத்தது போதும் என்று இந்த ஆண்டு கொந்தளித்துள்ளனர் .
இது வரை இல்லாத அளவிற்கு மாணவர்களும் பொதுமக்களும் சிறுவர்களும் கடும் குளிர் என்று பாராது வரலாறு காணாத அளவில் போராடி வருகின்றனர்.
இதனை தெரிந்தும் புரிந்தும் தெரியாதது போல் தற்சமயம் தந்தி டிவி தொலைக்காட்சி விவாதத்தில் வன்னி அரசு பேசும்பொழுது இந்த ஜல்லி கட்டு ஆதிக்க ஜாதி வெறியர்களின் விளையாட்டு.
இதற்கு ஏன் மாணவர்கள் போராடுகிறார்கள் நாட்டில் அப்படி என்ன நடந்து விட்டது இதற்கு முன் இவர்கள் விவசாயத்திற்காக போராடி இருக்கிறார்களா அல்லது ஈழத்தமிழர் பிரச்சனை க்காக போராடி இருக்கிறார்களா இதற்கு மட்டும் ஏன் இந்த போராட்டம் அப்போது இது ஏன் ஆதிக்க ஜாதிக்காக நடத்தும் போராட்டாமா என்று வன்னியரசு கேட்கிறார்!
நாங்கள் கேட்கிறோம் ஒட்டு மொத்த ஜாதியினரும் எந்த ஜாதி என்றெ தெரியாமல் மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இது போல வன்னி அரசு பேசுவது எதை சுட்டிக் காட்டுகிறது?
இவருக்கு தெரிந்தது அவர் ஜாதி மட்டும் தானா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா அல்லது பீட்டா அமைப்பிற்கு சாதகமாக செயல்படுகிறாரா என்பதே தெளிவு படுத்தவேண்டும்
தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட பல போராட்டங்களை நடத்தி வரும் திருமாவளவன் இவரின் பேச்சை ஆதரிக்கிறாரா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளை அவமானப் படுத்தும் வன்னி அரசு இதற்கு பதில் சொல்லவேண்டும் மாணவர்களின் இது போன்ற போராட்டத்தை ஊக்கப்படுத்தாவிட்டாலும் பராவாயில்லை வன்னி அரசு போன்ற அரசியல்வாதிகள் உதாசி்னப்படுத்தாமல் இருந்தால் சரி” என்று . ஜல்லிக்கட்டு போராட்ட குழு தெரிவித்திருக்கிறார்கள்.