கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது. இதில், சகுந்தலா தேவியாக வித்யாபாலன் நடிக்கிறார். அடுத்த ஆண்டு 2020 படம் வெளியாகவுள்ளது.
கணித மேதை சகுந்தலா தேவி, தனது ஐந்தாவது வயதில், 18 வயது மாணவர்களுக்கான கணிதத்தைத் தீர்த்து வைத்தவர். அதிவேகமாக சிக்கலான கணக்குகளைப் போடுவதில் வல்லவர். மனித கம்ப்யூட்டர் என்று போற்றப்படுபவர்.
அனு மேனன் இந்தப் படத்தை இயக்குகிறார். வித்யாவைவிட வேறு யாரும் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமில்லை என அனு மேனன் கூறியுள்ளார். படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.