டில்லி
வேலைப் பளுவால் நேரத்துக்கு வீட்டுக்கு திரும்ப முடியாத காவல்துறையினரின் நிலையை பிரதிபலிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை கிடையாது. எப்போது அழைத்தாலும் உடனடியாக பணிக்கு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டும் பணி என்பதும் கிடையாது. இவை அனைத்தும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால் காவல்துறையினர் வீட்டு குழந்தைகளுக்கு அது புரிய வாய்ப்பில்லை.
நேரத்துக்கு வராத காவல்துறையில் பணி புரியும் தந்தையை அலுவலகம் செல்லக் கூடாது என ஒரு குழந்தை தடுக்கும் வீடியோ டிவிட்டரில் பதியப்பட்டது. அருண் போத்ரா என்பவர் பதிந்த அந்த பதிவில், “காவல்துறையினர் பணியில் இது மிகவும் கடுமையானது. தொடர் வேலை நேரத்தினால் குறித்த நேரத்துக்கு வீடு திரும்ப முடியாத பல காவல்துறையினர் இந்த நிகழ்வை சந்திக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=-KHHNsJEp1s]
சுமார் 1 நிமிடம் மற்றும் 25 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு சிறுவன் தனது காவல் அதிகாரியான தந்தையை வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கிறான். தந்தை. “மகனே, நான் விரைவில் திரும்பி விடுவேன். என்னை போக விடு” என கூறுகிறார். ஆனால் அந்த குழந்தை அவருடைய இரு கால்களையும் கட்டிக் கொண்டு போக விடாமல் தடுத்து அழுகிறது.
https://twitter.com/arunbothra/status/1122326391620427777?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1122326391620427777&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fbeta-jaldi-aa-jaaunga-cop-tells-son-stopping-him-from-going-to-work-viral-video-tears-internet-up-1512159-2019-04-28
இந்த வீடியோ பதிவை பலரும் பகிரவே இது வைரலாகி உள்ளது. பதிவை கண்ட பலரும் காவல்துறையினரின் பணியை பாராட்டிஉள்ளனர். அதில் ஒருவர் அந்த குழந்தையின் அன்பையும் பாராட்டி உள்ளார். இவ்வளவு அன்பான குழந்தையிடம் தனது அன்பைக் காட்டவும் நேரமின்றி காவல்துறையினர் துயருறுகின்றனர் என அவர் பதிந்துள்ளார்.