டில்லி

றைந்த பிரதமர் இந்திரா காந்தி பன்மொழி அறிவு பெற்றவர் என்பதை சுட்டிக்காட்ட பிரெஞ்சு மொழியி தடையின்றி அவர் பேட்டி அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

 

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வெளிநாடுகளில் பயின்றவர். உலகில் பல மொழிகளை அறிந்தவரும் ஆவார். அதே நேரத்தில் அவர் ஆங்கிலத்தில் சரளமாக தடையின்றி உரையாடுவார் என்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும். அவருக்கு ஆங்கிலம் தவிர பல ஐரோப்பிய மொழிகளிலும் சரளமாக பேசத் தெரியும் என்பது பலருக்கு தெரியாது. அவர் பிரெஞ்சு மொழியில் சரளமாக பேசி பேட்டி அளித்துள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 1969 ஆம் வருடம் ஜனவரி 14 ஆம் தேதி எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் பிரெஞ்சு ஊடகவியலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சரளமாக பதில் அளித்து தமது பிரெஞ்சு புலமையை வெளியிட்டுள்ளது இன்றளவும் மக்களை புகழ வைத்துள்ளது.

பத்திரிகையாளர் : தங்களுடைய ஆழ்ந்த சிந்தனையில் இடம் பெற்றுள்ள தேசிய பிரச்னைகள் என்ன? பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நீங்கள் தள்ளிப்போடுவது எந்த பிர்ச்னைகளை?

இந்திரா காந்தி : எங்களுக்கு உள்ள அவசர பிரச்னைகள் சமுக நீதியைக் கொண்டு வந்து அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதரத்தில் சிறந்தவர்களாக ஆக்குவது ஆகும். உண்மையில் இது போன்ற பிரச்னைகளை உடனடியாக அல்லது முழுவதுமாக தீர்ப்பது இயலாத ஒன்றாகும். ஆயினும் அதற்கான பணிக்ளை துவக்கி உள்ளோம். இதன் மூலம் படிப்படியாக பிரச்னைகளுக்கு தீர்வு காண உள்ளோம்.

ப: நீங்கள் ஒரு பெண் என்பது உங்கள் முடிவில் தாக்கம் உண்டாக்குகிறதா ?

இ : இல்லை. இது அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்னை ஆகும்.

ப : நீங்கள் இளம் வயதில் அரசியலுடன் வளர்ந்துள்ளதால் அதுவும் உங்கள் தந்தை பண்டித நேரு என்பதால் அரசியலில் முழுதும் ஈடுபட வேண்டியதாகி விட்டது. நீங்கள் பிரதமரானதற்கு என்றாவது வருத்தம் கொண்டதுண்டா?

இ : எனது தந்தை மட்டும் அல்ல, எனது தாயார், தாத்தா, பாட்டிகள், அத்தைகள், மாமாக்கள், சித்தப்பா மற்றும் பெரியப்பாக்கள் அவ்வளவு ஏன் எனது குடும்பம் முழுவதுமே அரசியலில் இருந்தது. எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு அபரிமிதமானது ஆனால் மிகவும் விரும்பக் கூடியதும் ஆகும். அதை விடுவதைக் குறித்து நினைக்கக் கூட எனக்கு நேரமில்லை என்பதே உண்மையாகும்.

ப : நீங்கள் உங்கள் பணியில் ஊக்கமின்மையை எப்போதாவது உணர்ந்தது உண்டா?

இ : இல்லை. எனக்கு இந்தியா முன்னேறும் என்பதிலும் இந்திய மக்க்ள் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது.

ப : நீங்கள் எப்போதாவது தங்களால் முடியாத அளவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டதாக நினைத்தது உண்டா?

இ : இல்லை. முடியாதது என எதுவும் இல்லை. யார் சொன்னது என தெரியவில்லை. ஒரு அறிஞர் தங்கள் தந்தையை பின்பற்றுவோருக்கு முடியாதது என எதுவும் இல்லை என சொல்லி இருக்கிறார். ஆனால் நான் நாட்டுக்கு சேவை செய்ய எண்ணுவோருக்கு முடியாதது என எதுவும் இல்லை என சொல்வேன்.

ப : இந்திய பிரெஞ்சு உறவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இ : எனக்கு பிரான்ஸ் நாடு மற்றும் பிரெஞ்சு கலாசாரம் மிகவும் பிடிக்கும். நமது இருநாடுகளுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. அது மிகவும் முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம்.

ப : நீங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு வந்ததுண்டா?

இ : ஆம். பலமுறை வந்திருக்கிறேன்

ப : கடந்த 1968 ஆம் வருடம் உங்களை ஒரு புகழ் பெற்ற பிரென்சு செய்தித்தாள் வாசகர்கள் பிரெஞ்சு நாடு மிகவும் விரும்பும் ஒரு பெண்ணாக தேர்தெடுத்துள்ளது உன்க்களுக்கு தெரியுமா?

இ : தெரியும். கேள்விப்பட்டேன்

ப : தெரியுமா? நீங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் உங்கள் புகழைக் குறித்து கவனம் கொள்கிறீர்களா?

இ : இதை கேள்விப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் ஆதரவாக இருந்தாலும் சரி எதிராக இருந்தாலும் சரி எந்த ஒரு விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.

ப : நீங்கள் எப்போது எந்த ஒரு சூழ்நிலையில் எங்கள் மொழியை கற்றுக் கொண்டீர்கள் என எங்களுக்கு சொல்லுங்கள்

இ : நான் சுவிட்சர்லாந்தில் இருந்த போது கற்றுக் கொண்டேன். ஆனால் நான் பிரஞ்சு மொழியை பாடமாக கற்கவில்லை.

ப : உங்களுக்கு பிரெஞ்சு ஆசிரியர் இல்லையா?

இ : இல்லை. உங்கள் மொழியில் caught என்பதை ஆங்கிலத்தில் pick up என சொல்வார்கள் என அறிந்தேன். அதன் பிறகு சிறிது சிறிதாக மொழியை நானே கற்றேன். எனக்கு மொழிகளை கற்றுக் கொள்வது மிகவும் பிடிக்கும். எனக்கு தெரிந்த அத்தனை மொழிகளையும் நானே கற்றுக் கொண்டேன்.

ப : உங்களுக்கு பிரெஞ்ச் மொழியில் படிக்க தெரியுமா?

இ : எனக்கு படிக்க தெரியும். ஆனால் நேரமின்மை காரணமாக என்னால் அதில் முழு கவனம் செலுத்த இயலவில்லை.

என இந்திரா காந்தி சரளமாக பேட்டி அளித்துள்ளார்.

 

[youtube https://www.youtube.com/watch?v=5VDYl6Uaf6g]