கமதாபாத்

டேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் மது அருந்துவது போல காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் மட்டும் அல்ல ஹர்திக் படேல் பற்றிய செய்திகளும் பரப்பரப்பை உண்டாக்கி வருகிறது.   படேல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டை முன் வைத்து முழு நேர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஹர்திக் படேல் ஒரு பெண்ணுடன் ஓட்டல் அறையில் உல்லாசமாக பேசிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகியது.   இது தோவி பயத்தில் பா ஜ க செய்யும் கீழ்த்தரமான சதி என்னும் பாணியில் ஹர்திக் பா ஜ க வை கடுமையாக தாக்கி இருந்தார்.

இன்று ஹர்திக் படேலின் அடுத்த வீடியோவை எதிர்க் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.  இந்த வீடியோவில் ஹர்திக் படேல் தனது நண்பர்களுடன் மது அருந்தும் காட்சியுள்ளது.   அவர்களுடன் பெண் ஒருவரும் அமர்ந்து மது அருந்துவது போல காட்சி உள்ளது.   இந்த வீடியோ இன்று பரபரப்பாக பேசப்படுகிறது.   இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர், “மக்கள் மத்தியில் புரட்சிகரமான கருத்துக்களைக் கூறி போராட்டம் செய்பவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த தவறும் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.   மதுவிலக்குக்கு முக்கியத்துவம் தரும் மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர் பெண்ணுடன் மது அருந்துவது கண்டனத்துக்குரியது” எனக் கூறி உள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=JOHZPbIWeeY]