டியோரியா

த்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் செல்லும் பேருந்தில் கொரோனா சோதனை நடைபெறுகிறும் வீடியோ வைரலாகி வருகிறது.

தேசிய ஊரடங்கு காரணமாகப் பல வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இவர்கள் அனைவரும் தினக்கூலி தொழிலாளர்கள் என்பதால் பணி இல்லை என்றால் இவர்களுக்கு உணவு கிடைக்க வழி இல்லாத நிலை உள்ளது.

இதனால் டில்லி நகரில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களை இரவு நேரப் பேருந்துகளில் அரசு அனுப்பி வருகிறது.  இவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் இவர்களை அந்தந்த மாநில அரசுகள் சோதித்து வருகின்றன.

அவ்வகையில் உபி மாநிலம் கிழக்குப் பகுதியில் உள்ள டியோரியா பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் உபி மாநில அரசு மருத்துவர்கள் தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் சோதித்து அவர்களின் பெயர்,முகவரிகளை பெற்றுக் கொண்டு அனுப்பப்படுவது பதிவாகி உள்ளது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=NESk5c1NwwU]