அகர்தலா:

திரிபுராவில் பிரதமர் கலந்துகொண்ட அகர்தலா நிகழ்ச்சியில், திரிபுரா மாநில அமைச்சர் ஒருவர், பெண் அமைச்சர் ஒருவரின் இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 9ந்தேதி திரிபுரா சென்ற பிரதமர் மோடி, அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரிபுரா அமைச்சர்கள் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திரிபுராவின் மாநில அமைச்சராக உள்ள  மோனோஜ் காந்தி டெப், (Monoj Kanti Deb)  மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே,  அதே மேடையில் தனது அருகில் நின்றுகொண்டிருந்த சமூகநலத்துறை  பெண் அமைச்சரான சாந்தா சக்மாவின் பின்புறம் சென்று, அவரது இடுப்பை அவ்வப்போது பிடிப்பதம்,  பெண் அமைச்சர் அவரது கையை பிடித்து தள்ளுவதும், தொடர்ந்து, அவரை அணைக்க முயற்சித்ததும் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி பேசும் மேடையிலேயே இந்த அசிங்கமான செயல் அரங்கேறியது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்திப்பபட்டு வருகிறது. அவர்களின் செயலுக்கு கடும் கண்டனமும் எழுந்துள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோ…