லக்னோ:
உ.பி. மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இரவு நேரத்தில் மது விருந்துடன் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள தெதாரியா என்ற கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து சென்ற பின்னர் இரவு நேரத்தில் இந்த பள்ளியானது ஆபாச நடன மையமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த கிராமத்தின் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு அங்கு மது விருந்தும் நடந்துள்ளது.
பார்களில் நடமானடும் பெண்களை அழைத்து வந்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி சாவியை யாரிடம் கொடுக்கப்பட்டது, இதன் பின்னணியில் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.