தொண்டர்களுடன் உணர்வுப்பூர்வ தொடர்பை காங்கிரஸ் வலுப்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

டில்லி:

பெரும் போராட்டம் மற்றும் அரங்கேற்றப்பட்ட பெரும் நாடகத்திற்கு பின் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக அகமது படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சிஎன்என் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அகமது படேலின் வெற்றி குறித்து பழமையான பாதுகாவலனான உங்கள் கருத்து என்ன? பழமையான உங்களது கட்சியின் கருத்து என்ன?

நான் வயதான பாதுகாவலன் கிடையாது. என்னை விட பலர் வயதானர்வகளாக உள்ளனர். இதற்கும் நடந்துள்ள சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. எங்களது அமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குஜராத் சம்பவம் உணர்த்தியுள்ளது. கட்சியின் தொண்டர்கள், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான தொடர்பை கட்டமைக்க வேண்டும்.

ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும், ஒவ்வொரு அரசியல் கட்சி நிர்வாகியும் அவரவர் சார்ந்த தொகுதி, மாவட்டம், மண்டல தொண்டர்களின் தேவையை உணர வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படக் கூடாது. இங்கே 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். 7 பேருக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ஒருவர் தவறாக வாக்களித்துள்ளார். இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தொண்டர்களின் நம்பிக்கைக்கு, உணர்வுக்கு பொறுப்பானவர்கள் என்பதை மறந்துவிட்டனர்.

 இதன் மூலம் கோமாவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கிடைத்துவிட்டது என்று கூறமுடியுமா?

காங்கிரஸ் கட்சி கோமா நிலையில் இல்லை. மீடியாக்கள் தான் பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக எதிர்கட்சிகளின் நிலையை இவ்வாறு சித்தரிக்கின்றன. என்னை பொறுத்தவரை காங்கிரஸ் ஒரு புறக்கணிக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தது. ஆட்சியில் இருந்தபோது கட்சியை ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைப்பின் கட்டுமானத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற பாடம் கற்க்கப்பட்டுள்ளது. ஒரு முறை அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்திவிட்டால் அது சண்டைக்கு ஏற்ற எந்திரமாக மாறிவிடும். இதன் பின் அது மேலும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் பலர் அமைப்பை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அரசியன் செயல்பாடு முன்பை விட அதிகரிக்கும். அதிக நம்பிக்கை ஏற்படும்.

ஜெய்ராம் ரமேஷ் கூறியது போல் காங்கிரஸ் இரு புற நெருக்கடியில் சிக்கியுள்ளதா? நாடு இல்லாத மன்னர்கள் (சுல்தானேட் இல்லாத சுல்தான்) இருக்கிறார்களா?

நான் தத்துவவாதி கிடையாது. அதனால் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த இயலாது. எனினும் நாம் கீழ் நோக்கி சென்று பிளாக் கமிட்டி மற்றும் மாவட்ட கமிட்டிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது. பல மாநிலங்களில் இதற்கான பணி தொடங்கிவிட்டது. பிளாக் மற்றும் மாவட்ட கமிட்டிகளை ஆரோக்கியம் உள்ளதாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக.வின் நிறுவன கட்டமைப்போடு காங்கிரஸ் கட்டமைப்பு ஒத்துப்போகவில்லை என்று பேசினீர்கள். தற்போதைய குஜராத் வெற்றி மூலம் அமித்ஷாவின் கோட்டையிலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

பதில்: இதில் அதிக அளவில் பணம் கைமாறியுள்ளது என்ற எங்களின் வாதத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா?. கவர்ச்சிகரமான ஆசை வார்த்தைகள், உத்தரவாதங்கள் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.க்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?. தேர்தலில் நடந்தது பாஜக.வின் திடீர் கண்டுபிடிப்பு கிடையாது.

இதே போன்ற நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியும் கடந்த காலங்களில் கையாண்டுள்ளதே?

எங்கு அப்படி நடந்தது என்பதை கூறுங்கள். மறுபடியும் அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து 6 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்த சம்பவம் எனக்கு நினைவு தெரிந்து நடக்கவில்லை. தலைவர் உள்பட 7 எம்எல்ஏக்களை காணவில்லை. ஒருவர் செல்லாத ஓட்டு போட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்ததாக எனக்கு நினைவில்லை.
எதேனும் ஒருவர் இங்கோ அல்லது அங்கோ மாறிய சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் ஒரே சம்பவத்தில் ஜனநாயகத்தை ஏளனம் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. ஒட்டுமொத்த ஜனநாயக நடைமுறையை கண்டு மூ க்கின் மேல் விரல் வைக்கும் நிலை உருவாகிவிட்டது.

 தேர்தல் கமிஷன் முன்பு நீங்களும், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் என இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் கூடி சண்டை போட்ட சம்பவம் இதற்கு முன்பு நட ந்துள்ளதா?

தேர்தல் கமிஷன் அலுவலகத்தின் உள்ளே நான் நுழைந்தது இது தான் முதல் முறை. இதற்கு முன் நான் அந்த அலுவலகத்திற்குள் சென்றது கிடையாது. தேர்தல் கமிஷனுடனான சந்திப்பு நேரம் கிடைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு சென்றேன். அங்கு குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், ஆர்பிஎன் சிங், ரந்தீப் சுர்ஜிவாலாவுடன் நானும் தேர்தல் கமிஷனரை சந்தித்தோம்.

ஆனால் அங்கு அமைச்சரவை கூட்டம் நடக்கும் இடத்தை மாற்றி அமைத்திருந்தது போல் தேர்தல் கமிஷன் இருந்தது. பிரதமர் மட்டும் தான் அங்கு வரவில்லை. இறைவன் அவரை ஆசிர்வதிக்கட்டும்.

உங்கள் கட்சி மூத்த தலைவர்கள் வருகை பற்றி:

ஆமாம், மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள். இருவர் பொதுச் செயலாளர்கள், ஆர்பிஎன் சிங் மாநில பொறுப்பாளர். ரந்தீப் சில் செய்தி தொடர்பாளர். அதனால் கட்சி நிர்வாகிகள் தான் அங்கு சென்றனர்.

 அகமது படேல் வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பழைய மற்றும் புதிய தலைமுறையினருக்கு இடையிலான பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறீர்களா?

உங்களுக்கு பேச வேறு எதுவும் இல்லை என்பதால் இது பற்றி பேசுகிறீர்கள். இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கை எனக்கு உள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்ற தொகுதி செயலாளர்களாக காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி பேசுவேன். இதற்கு உதாரணமாக சமீபத்தில் குஜராத்தில் இருந்து 4 பேர், கர்நாடகாவில் 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 4 இளைஞர்கள் 3 பொதுச் செயலாளர்களின் கீழ் செயல்பட நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 12 இளைஞர்கள் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த 2013ம் ஆண்டில் இருந்து துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதல் 27 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது பற்றி?

என்ன 27 தேர்தல், எங்களுக்கு 27 தேர்தல்கள் நடக்கவில்லை

 

அவர் பழமையான கட்சியை வழிநடத்தி செல்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா? . உங்களை போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இருக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியை இளைய தலைமுறை வழிநடத்த வேண்டும என்கிறீர்கள். இளைஞரும், வயதானவரும் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்ள முடியுமா?

நான் பல முறை கூறியிருக்கிறேன். ராகுல்காந்தி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ப்பூரிலேயே இதை தெரிவித்துள்ளேன். தற்போதும் கூறுகிறேன். மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்கள், முதல்வர், அமைச்சர்களாக வரக்கூடிய இளைஞர்களை நாடு முழுவதும் என்னால் அடையாளம் காண முடியும்.

காங்கிரஸ் பணிக்கு குழு குறித்து?

உண்மையாக காங்கிரஸ் பணிக்குழுவின் கட்டமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டும். இளைஞர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் தலைவராக நேரு வந்த போது அவருக்கு வயது 40. அதனால் 40 வயது நிரம்பியவர்களை பணிக்குழுவில் உரிய பொறுப்புகளுடன் ஏன் நியமனம் செய்யக்கூடாது?.

 மூத்த தலைவர்களை என்ன செய்வது?

அவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. நாங்கள் எழுதலாம், பேசலாம். தேவைப்படும் சமயங்களில் தேர்தல் கமிஷன் செல்லலாம். இதுபோன்று பல வேலைகள் இருக்கிறது.

 2ம் முறை நடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பல அவப்பெயர் ஏற்பட்டது என்று நினைக்கிறீர்களா?

எந்த ஒரு அரசாக இருந்தாலும் முடியும் போது கறையுடன் தான் முடியும். அது 5 ஆண்டுகளோ, 10 ஆண்டுகளோ இருந்தால் பலவீனமாக தான் இருக்கும். நான் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மகாராஷ்டிராவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் இடத்தில் இருந்த ஏக்னாத் கத்சே கரை படிந்த கையுடன் அரசில் இருந்து விலகியுள்ளார்.

அடுத்து வீட்டு வசதி துறை அமைச்சர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். தீவிர குற்றச்சாட்டு ஆளான அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அல்லது முதல்வர் ராஜினாமா கடிதத்தை கேட்டிருக்க வேண்டும். செயலாளர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் எப்படி பதவியில் தொடரலாம். சில ஆண்டுகளுக்கு அரசு பதவியில் இருந்தால் குற்றச்சாட்டுக்கள் வரத் தான் செய்யும். அதே போன்று தான் 2வது ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஆனால் இதில் எதுவுமே நிரூபனம் ஆகவில்லை.

 
English Summary
Congress Must Pay Attention to Organisation, Build Organic Links: P Chidambaram