ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடுவது சிறுவர்களிடையே அதிகரித்து வருவதால் இது அவர்களது மூளை மற்றும் செயல்திறனை பாதிப்பதாக 2018 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்தது.

மேலும், இதனை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் வீடியோ கேம் நிறுவனமான சீனாவின் டென்சென்ட் மற்றும் நெட்-ஈஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் லாபமீட்டி வந்தது.

இந்நிலையில், சீன அரசு 18 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மட்டும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் வீடியோ கேம்ஸ் விளையாட அனுமதி அளித்துள்ளது.

டென்சென்ட் மற்றும் நெட்-ஈஸ் உள்ளிட்ட ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு அனுமதியளிப்பதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சீன அரசின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதால், ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் சரியத்த தொடங்கி இருக்கின்றன.