கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, ஆந்தாலஜி பாணியிலான படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சின்ன குழு, ஒரே இடத்தில் படப்பிடிப்பு, குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நிறைவு என ஒவ்வொரு முன்னணி இயக்குநரும் ஆந்தாலஜி கதையில் களமிறங்கினார்கள்.
இந்நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ‘விக்டிம்’ ஆந்தாலாஜி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சிம்பு தேவன், ராஜேஷ், ரஞ்சித் ஆகியோர் ஆளுக்கொரு கதையை இயக்கியுள்ளனர். எந்த இயக்குநரின் கதையில் யார் நடித்துள்ளார்கள் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
முதலில் திரையரங்கில் வெளியிடலாம் என்றே திட்டமிட்டு இருந்தது படக்குழு. இந்த ஆந்தாலஜியின் வெளியீட்டு உரிமையை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.