சின்ன குழு, ஒரே இடத்தில் படப்பிடிப்பு, குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நிறைவு என ஒவ்வொரு முன்னணி இயக்குநர்களுமே ஆந்தாலஜி கதையில் களமிறங்கியுள்ளனர்.
‘புத்தம் புதுக் காலை’ ஆந்தாலஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக 2 ஆந்தாலஜிக்கள் தயாராகி வருகிறது. வேல்ஸ் நிறுவனம் ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜியை தயாரித்துள்ளது.
ந்நிலையில், வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி புதிய ஆந்தாலஜி ஒன்றை தயாரித்துள்ளது. இதில் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் இயக்கியுள்ளனர். 4 கதைகளுமே ஒரே கருவைக் கொண்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Very true @menongautham sir
But, do you all know what victimized @chimbu_deven @rajeshmdirector @beemji and @vp_offl ? pic.twitter.com/AM15PDWDhP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 1, 2020
‘விக்டிம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜியை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.