டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட  பலர்  மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில்  66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  இந்த தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ரெட்டி ஆகியோரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,   கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று திடீரென தனது பதவியை  ராஜினாமா செய்தார்.  இதையடுத்து நாட்டின 17வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி,   செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது.  வாக்குப்பதிவு முடிந்த உடனேயே  வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்டு 21ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இதுவரை தாக்கல் செய்த வேட்புமனுக்களை பரிசீலனை நடைபெற்றது. குடியரசுத் துணைத் தலைவர்  பதவிக்கு, மொத்தம் 46 பேர் 68 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 19 பேரின் 28 வேட்பு மனுக்கள் தேர்தல் சட்டத்தின் கீழ் தொடக்கத்திலே நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மீதுள்ள   27 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த 40 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.

இதில், முறையான ஆவணங்கள் இன்றி தாக்கல் செய்த  25 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் பி.சுதர்ஷன் ரெட்டி மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு – பாஜகவுக்கு சிக்கல்…

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!