சென்னை
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்திய வரலாற்றை மாற்றி அமைப்பதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருத்தை அங்கீகரித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்ற வாரத் தொடக்கத்தில் சட்டப்பேரவையில், “இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருன்வெ ஆரம்பித்துள்ளது. சுமார் 3200 வருடங்கள் பழமையானதாகத் தாமிரபரணி நாகரீகம் இருந்துள்ளது. இது தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகாசி அருகே உள்ள கீழடி உள்ளிட்ட இடங்களில் நடந்த அகழாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே விஞ்ஞான ரீதியாக இந்திய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நேற்று சென்னையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் (இந்திய வர்த்தக சபையின்) பவளவிழா கூட்டம் நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அவர் தனது உரையில், “மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழகத்தில் பழமையான கலாச்சாரம் இருந்துள்ளது. இவை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருடகளை ஆய்ந்த போது தெரிய வந்துள்ளது.
கம்போடியாவில் உள்ள அங்கோர் வார் ஆலயத்திலும் இதைப் போல் பல பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த கோவில் கடந்த 12 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் தாக்கம் அப்போதே உலகெங்கும் பரவி இருந்துள்ளது. ஆகவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதைப் போல் இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இதை காலனித்துவ கண்ணோட்டத்தில் இல்லாமல் இந்திய கண்ணோட்டத்துடன் எழுத வேண்டும்” என மு க ஸ்டாலின் கூறியதை அங்கீகரித்துள்ளார்.