கோவை: உதகையில் இன்று ஆளுநர் ரவி  தலைமையில் நடைபெறும்  துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய மாநில தனியார் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, உதகையில் இன்று நடைபெறுகிறது. உதகை ராஜ்பவனில் நடைபெறும் இந்த மாநாட்டை துணை குடியரசு தலைவர், ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

இந்த நிலையில்,  தமிழக ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை அரசுப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் வேந்தர் மற்றும் துணைவேந்தர்கள் நியமன மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் நேரடியாக ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்ததராக முதல்வரே இருக்கும் நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து வேத்நர் என்ற முறையில் முதலமைச்சர் ஸ்டாலின பல்கலைக்கழக வேந்தர் மாநாட்டை கூட்டி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த நிலையில், தானே பல்கலைக்கழக வேந்தர் என்று கூறி வரும் ஆளுநர் ரவி, வழக்கமான நடத்துவதுபோல இந்த ஆண்டும் துணைவேந்தர் மாநாட்டை உதகையில் நடத்தி வருகிறார்.  இந்த மாநாட்டில் கலந்துகொள்ள   தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மூன்று மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரபான சூழ்நிலையில் ஆளுநர் ரவி கூட்டியுள்ள துணைவேந்தர்கள் கூட்டத்தை அரசுப்பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லையென தெரிவித்துள்ளார். இதே போல ஒரு சில பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்கவிலைலையென கூறப்படுகிறது.

ஏற்கனவே, சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாத நிலையில், துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.