ரித்வார்

ச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட தடை விதித்தால் அதற்காக சட்ட.ம் கொண்டு வர இந்துக்கள் போராடுவார்கள் என விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.   இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் கோக்ஜி செய்தியாளர்களை ஹரித்வாரில் சந்தித்தார்.  இவர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், இமாசல பிரதேச ஆளுநராகவும் பதவி வகித்தவர் ஆவார்.

இந்த சந்திப்பில் கோக்ஜி, “தற்போது உச்சநீதிமன்றத்தில் ராமர் கோவில் கட்டுவ்து தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.   இந்த வழக்கு இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் முடிவடைந்து நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதில் ஐயமில்லை.   ஒருவேளை கோவில் கட்ட தடை விதித்து தீர்ப்பு வந்தால் இதை ஒரு சட்டமாக்கி கோவில் கட்ட மத்திய அரசு முயல வேண்டும்.

இந்து சமுதாய மக்கள் போராட்டம் நடத்தி தங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களை இதற்காக குரல் கொடுக்கச் சொல்ல தயாராக உள்ளனர்.   கடந்த 4 வருடங்களிலேயே அது போல சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும்.   ஆனால் இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை.   இந்து மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நினைத்தாவது இந்த சட்டம் இயற்றப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.