சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண் சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண் சிங்கத்தை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. வழக்கு தொடர்ந்துள்ளது.
சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் உள்ள செபஹிஜால உயிரியல் பூங்காவில் இருந்து சிறுத்தைகள், குரங்குகள், லாங்கர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவற்றில் அக்பர் என்ற 7 வயதான ஆண் சிங்கமும் சீதா என்ற 5 வயதுடைய பெண் சிங்கமும் வந்துள்ளது.
இவ்விரண்டு சிங்கங்களும் சிலிகுரி உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஒரே பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
அக்பர் என்று இஸ்லாமிய பெயருடைய ஒரு ஆண் சிங்கத்தை சீதா என்ற இந்து பெயர் கொண்ட பெண் சிங்கத்துடன் எப்படி ஒரே இடத்தில் அடைத்து வைக்கலாம் என்ற விவாதம் எழுந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இந்த வழக்கு ஜல்பாய்குரியில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் பிப்ரவரி 20 ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
சிலிகுரி உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் இல்லதாதை அடுத்து ஒரு ஆண் மற்றும் பெண் சிங்கத்தை வரவழைத்த வனவிலங்கு அதிகாரிகள் இதனால் உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் மதம் காரணமாக மனிதர்கள் வழக்கு தொடர்ந்திருப்பதால் இந்த விலங்குகள் இனப்பெருக்கத்திற்கும் ஆபத்து வந்துள்ளது.