ருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளியில் அமைந்துள்ளது.

முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென் றார். அவருடன் நாரதர் மற் றும் பல தேவர் களும் உடன் வருகின்றனர். பூஜைக் குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டு தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப் பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் “ஊத்துக்குளி‘ என அப் பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.

திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.