‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார் தனஞ்ஜெயன்.

தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டில் தனஞ்ஜெயனுடன் கைகோத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

ஆர்.டி.எம் இயக்கியுள்ள ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விஷ்ணு ஸ்ரீ, இசையமைப்பாளர்களாக ஆதித்யா – சூர்யா, எடிட்டராக விமல் ராஜ், கலை இயக்குநராக ராஜேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது.