திருவனந்தபுரம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற பழம்பெரும் மலையாள எழுத்தாளர் இன்று மரணம் அடைந்தார்.
மலையாளத்தின் புகழ் பெற்ற முன்னணி எழுத்தாளர்களில் ஒரு வர் புனத்தில் குஞ்சப்துல்லா. கேரளா மாநிலத்தில் உள்ள வடகரையில் 1940ஆம் ஆண்டு பிறந்தவர். இதுவரை இவரது பல நாவல்களும் 15 சிறுகதை தொகுப்புக்களும் வெளியாகி உள்ளன. இவருடைய நாவல்களான மரன்னு, புனத்திலண்ட நாவல்கள், கன்யவான்கள், அக்னிகினாவுகள். அம்மய காணான், மற்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மருந்து, மஷ்கர் பெருவெளி ஆகிய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை
இவருடைய ஸ்மார சிலகள் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதும், கேரள அகாடமி விருதும் கிடைத்துள்ளன. இது தவிர முட்டத்து வர்க்கி விருது, விஷ்வதீபம்விருது ஆகியவைகளையும் இவர் பெற்றுள்ளார். இவர் இன்று தனது 77ஆம் வயதில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர் மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.