புதுடெல்லி:

பழம்பெரும் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார். அவருக்கு வயது 95.


தற்போதைய பாகிஸ்தானின் சியோல்கோட்டில்பிறந்தவர். தேச பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தார்.

லாகூரில் சட்டம் படித்த நய்யர், அமெரிக்காவில் இதழியல் பயின்றவர். உருது மொழி பத்திரிகையில் செய்தியாளராக தனது பத்திரிக்கை பணியை தொடங்கினார்.

இந்திய அரசியலில் முக்கிய நிகழ்வுகள் பற்றி அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார். எமர்ஜென்சியின் போது அரசின் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து விரிவாக எழுதினார்.

அப்போது சிறை தள்ளப்பட்ட பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த குல்தீப் நய்யார் இன்று காலமானார்.