பாலக்காடு:
ல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சங்கரநாராயணன், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89.

சங்கரநாராயணன் மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியவர். மேலும் அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்புகளை வகித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மற்றும் கேரளாவில் பல்வேறு அரசாங்கங்களில் நிதி, கலால் மற்றும் விவசாய இலாகாக்களிலும் பணியாற்றி உள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். அவரது உடல் அவரது இல்லத்திலும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று மாலை 5.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

அவரது மறைவுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]