பெங்களூரு

மூத்த நடிகை ஜெயந்தி இன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

மூத்த நடிகையான ஜெயந்தி கன்னட நடிகை என்றாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் நடித்த எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், புன்னகை, வெள்ளி விழா, உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.   கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயந்தி பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.  இந்த செய்தியை மருத்துவமனை அறிவித்துள்ளது.  ஜெயந்தியின் மரணச் செய்தி திரையுலகத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.   இவருக்கு தற்போது 76 வயதாகிறது.