
ராதிகாவின் வாணி ராணி தொடரில் நடித்து பிரபலமான வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும், கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜில் இருக்கிறாராம்.கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்திருக்கிறது. பின்பு மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள். உடனேயே கோமாவுக்கு சென்றுவிட்டார். #actorvenu pic.twitter.com/7hnRu8nlaf
— FridayCinema (@FridayCinemaOrg) July 28, 2021