ண்டிகர்

ஞ்சாப் மாநில மருத்துவமனைகளுக்கு பி எம் கேர்ஸ் நிதியின் கீழ் வழங்கப்பட்ட  வெண்டிலேட்டர்கள் இயங்க தொடங்கி சில மணி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாகக் கோடிக்கணக்கில் பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்னும் நிதியம் மூலம் நிதி திரட்டி உள்ளார்.   இதற்கு சரியாக கணக்கு அளிக்கப்படுவதில்லை என தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது.  தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பல மருத்துவ உபகரணங்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளன.

 

எனவே பி எம் கேர்ஸ் நிதியில் இருந்து பல மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன  அவ்வகையில் பஞ்சாப் மாநில மருத்துவமனைகளுக்கு    வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவை இயக்கத்துக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   இவ்வாறு நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட நேரத்தில் சிக்கல் உண்டானால் உயிருக்கு அபாயம் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதில் ஃபரித்கோட் நகரில் உள்ள குருகோவிந்த் சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட 80 வெண்டிலேட்டர்களில் ௭௧ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இவை அனைத்தும் பழுது பார்க்கப்பட்ட பிறகே பயன்படுத்த முடியும்.   இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் “இந்த வெண்டிலேட்டர்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது.  இந்த இயந்திரங்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு அடிக்கடி நின்று விடுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வெண்டிலேட்டர்கள் இல்லாத நிலையால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 300 கொரோனா நோயாளிகள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.   இந்த இயந்திரங்களை பழுது பார்க்க ஆட்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.  இவற்றைப் பழுது பார்க்கும் பணிக்கு முன்னுரிமை  அளிக்கபடடுள்ளது.

இந்த இயந்திரங்கள் சுமார் 25 கோடிக்கு மேல் விலையில் வாங்கப்பட்டும் இவை சரிவர இயங்கவில்லை.  எனவே பஞ்சாப் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த வெண்டிலேட்டர் எண்ணிக்கையில் 25% மட்டுமே தற்போது உபயோகத்தில் உள்ளது.