வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘கசட தபற’. ஒரே கதையில் 6 பகுதிகளாக இயக்கியுள்ளார் சிம்புதேவன்.
ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் ஆகியோரிடம் பணிபுரிந்தார் சிம்புதேவன்.
இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொடர் கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது ‘கசட தபற’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. சோனி லைவ் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.