ஐதராபாத்:

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான வெங்கைய நாயுடு வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் பொது வாழ்வில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் இவரது பதவி காலம் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையும். 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியுடன் அவருக்கு 70 வயது நிறைவு பெறுகிறது.

இந்நிலையில ஐதராபாத்தில் நடந்த ‘‘மீட் அண்டு க்ரீட்’’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசுகையில்,‘‘ 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் அரசியலில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன். இதன் பின்னர் எனது சொந்த கிராமத்திற்கு சென்று சேவை செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை பிரதமர் நரேந்திரமோடியிடம் தெரிவித்துவிட்டேன்’’ என்றார்.

‘‘2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பிறகும் மோடி பிரதமராக நீடிப்பார். பாஜக எனது தாயை போன்றது. எனது தாயை விட்டு பிரிவது மிகவும் கவலையாக தான் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே ஆந்திரா மாநில பாஜ தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் மத்திய அமை ச்சராக நியமனம் செய்யப்பட்ட பின் கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். 1983ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவர் பாஜக.வை தேர்வு செய்தார்.

இந்த தேர்தலுக்கு பின் முதல்வர் என்.டி. ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியில் சேர வெங்கையாவுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் அவர் நிராகரித்தார்.

அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் குடும்ப தரப்பில் இருந்து எவ்வித அழுத்தமும் வந்தது கிடையாது. அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு தனது பிள்ளைகளை அவர் கேட்டுக் கொண்டார்.

தனது பிள்ளைகளுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெங்கையா நாயுடுவை விமர்சனம் செய்தார். அப்போது நான் எனது பிள்ளைகளின் தொழில்களில் தலையிடுவது கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு வெங்கையா பதில் கூறுகையில், ‘‘இது போன்ற விமர்சனங்களில் இருந்து பொது வாழ்வில் இருப்பவர்கள் தப்பிக்க முடியாது. சேற்றில் இருப்ப்பவர்கள் மற்றவர்கள் வெள்ளை சட்டை, வேஷ்டி அணி ந்திருப்பதை விரும்ப மாட்டாகள்’’ என்று தெரிவித்தார்.