சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஊடகத்துறையினர் நடத்திய போராட்டத்தை, வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். வெங்காயத்தின் முதல் அடுக்கு.. ஊடகத்துறைக்கே அவமானம்.. என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நேற்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர்கள் போராட்டம் நடைபெற்றது. மக்கள் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்க முடியாத ஊடகங்கள், ஆளும் தரப்பினரை எதிர்த்துகேள்வி கேட்க முதுகெலும்பற்ற பத்திரிகை யாளர்க,ள பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினரிடம் எதிர்மறையான கேள்விகளை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்துவம், அவரது விமர்சனங்களை மட்டுமே விவாதப்பொருளாக்கி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதுபோல தமிழ்நாடு காவல்துறையும், எதிர்க்கட்சியினரை மட்டுமே குறிவைத்து, வரம்பு மீறி, நள்ளிரவு கைதுகளை அரங்கேற்றி வருகிறது.
இந்த நிலையில்தான், கடந்த 19 ஆம் தேதி சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பபினார். அதற்கு அண்ணாமலை அளித்த பதிலுக்கு கண்டனங்கள் எழுந்தன. நேர்காணல் எடுத்த பத்திரிகையாளரை ஆபாசமாக அண்ணாமலை விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போதே அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் தான் பேசிய வழக்கு மொழிதான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார் அண்ணாமலை.
இதைத்தொடர்ந்து, அண்ணாமலையை கண்டித்து ஜனவரி 25ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் போராட்டம் அறிவித்து போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் இந்து ராம் உள்பட முக்கிய ஊடகத்துறையினர் பங்கேற்றனர். போராட்டத்தில், நாக்கை அடக்கு நாகை அடக்கு அண்ணாமலையே நாக்கை அடக்கு என பேனர்களை கைகளில் ஏந்தி, அண்ணாமலைக்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்த நிலையில், ஊடகத்துறையினர் போராட்டம் குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன்.
இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன். தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும், வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள் இதோ என இந்து குழுமத்தின் என் ராம், மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார் அண்ணாமலை.
மேலும் பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில திமுக அடிவருடிகளால், இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். அதே நேரத்தில், ஆளும் திமுக அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறைக்கே அவமானம்”.. என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட வீடியோ: