சென்னை

கொரோனா தடுப்பூசி  போடுவதில் கோயம்பேடு மற்றும் காசிமேடு வர்த்தகர்களுக்கு சென்னை மாநகராட்சி முன்னுரிமை அளித்துள்ளது/

முதலாம் அலை கொரோனா பரவலில் கோயம்பேடு மற்றும் காசிமேடு பகுதி வர்த்தகர்கள் கொத்து கொத்தாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.  இதையொட்டி கோயம்பேடு மற்றும் காசிமேடு சந்தைகள் மூடப்பட்டன.  வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நகரின் பல பகுதிகளிலும் சந்தைகள் இயங்கின.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு மீண்டும் சந்தைகள் இயங்கத் தொடங்கின.  கடுமையாக அதிகரித்த தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகின்றன.  இம்முறை இந்த பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை.  கடந்த மே மாதம் 9000 பேருக்கு நடந்த  பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யபப்ட்டுள்லது.  ஜூன் மாதம் நடந்த 3400 பரிசோதனைகளில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி ஆகி உள்ளது.

கொரோனாவை தடுக்க ஒரே வழி தடுப்பூசி என்பதால் இங்குள்ள வர்த்தகர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.   நேற்று வரை கோயம்பேட்டில் சுமார் 10000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.    தவிர காசிமேடு மற்றும் சிந்தாதிரிப்பேட்டை சந்தையை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

வர்த்தகர்களுக்கு மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், சுமை கூலிகள் ஆகியோருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.