சென்னை: பிரபல சினிமா நிறுவனமான வேந்தர் மூவிஸ நிறுவனத்தின் எஸ்.மதன், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தருக்கு எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதம் தமிழ் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் வேந்தர் மூவிஸ். படங்களை தயாரிப்பதோடு, வாங்கி வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை, பாரிவேந்தருக்கு நெருக்கமான எஸ். மதன் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வேந்தர் மூவிஸ் வெளியிட்ட சில படங்களில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து வேந்தர் மூவிசின் அதிபர் எஸ்.மதன் மற்றும் ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனர் பாரிவேந்தருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், எஸ்.மதன் தனது நிறுவன லட்டர்பேடில் நான்கு 4 பக்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் பரவியிருக்கிறது. அந்த கடிதத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பாரிவேந்தர்தான் தீர்க்கவேண்டும் என்றும் இல்லை என்றால் காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன் என்றும் மதன் குறிப்பிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
மதன் எழுதிய கடிதங்கள் என்று கூறப்படும் ‘லட்டர்பேடு’ பக்கங்கள் வாட்ஸ் அப்பில் பரவிவருகின்றன. இதனால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel