சென்னை:

மிழ்நாட்டிலேயே அதிக அளவிலான  வெயில் கொளுத்தி வந்த கந்தகபூமியான வேலூரில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதிக பட்சமாக  44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில், நேற்று திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டதுபோல, காற்றுடன் சேர்ந்து மழையும் பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் கடும் வெப்பத்தால் தவித்து வந்த வேலூர் மக்கள் இந்த மழையால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த திடீர் மழை காரணமாக வேலூர், கொனாவட்டம், சென்சகம், ஆலப்புரம், வேளாபடி, சாய்ந்தபூர்ணம் மற்றும் அண்ணா சாலை  பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்தது. இதன் காரணமாக சில இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,  தமிழக கடற்கரையிலிருந்து வடக்கே நகரத்தை  நோக்கி நகரும் சூறாவளியின் விளைவு காரணமாகவே இந்த மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.