திருப்பத்தூர்,
வேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காகங்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது..
காகங்கரையை சேர்ந்தவர் மோகன், மின்சாரவாரியத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சின்னபாப்பா, என்னும் ராஜேஸ்வரி. தம்பதிகளுக்கு சுகன்யா என்ற மகள், தமிழரசன் என்ற மகன் இருக்கின்றனர். இருவரும் ஓசூரில் பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று மகன், மகள் இருவரும் சனி, ஞாயிறு விடு முறைக்கு ஊருக்கு வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரை யும் யாரோ மர்ம நபர்கள் கழுத்தை அழுத்து கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூரமான கொலை சம்பவத்தில் மோகன், சின்ன பாப்பா, சுகன்யா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். கடைசி மகன் தமிழரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலையாளிகள் முதலில் சுகன்யாவின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளனர். பின்னர் தாய் தந்தை தம்பி என மூவரையும் கழுத்தையும் கூர்மையான ஆயுதத்தால் அறுத்துள்ளது தெரிய வந்துள்ளது..
சம்பவ இடத்தில் டிஎஸ்பி பன்னீர் செல்வம் விசாரனை தலைமையில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு குடும்பத்தையே வேரோடு கொலை செய்ய முயற்சி செய்திருப்பதால், இது சொத்து தகராறாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.