வேலூர் மக்களவைத்தொகுதி தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

Must read

சென்னை:

வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதி நடை பெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிகான தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கதிர்ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பிலும் ஏ.சி. சண்முகம் களமிறங்கி உள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளனர்.

More articles

Latest article