நாகை: வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே இரண்டு நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதுபோல, ஆகஸ்டு 14 முதல் மயிலாடுதுறை – திருவாரூர் மற்றும் திருவாரூர் – காரைக்குடி  இயக்கப்படும்  ரயில் சேவை குறித்த புதிய ரயில்வே கால அட்டவணை வெளியாகி உள்ளது. மேலும், சோழன் விரைவு ரயில், சென்னையில் இருந்து இயக்கப்படும் குருவாயூர் விரைவு ரயிலின் நேரமும் மாற்றப்படவுள்ளது.

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பேராலயத்தின்எதிரே வங்கக்கடல் உள்ளதால் வேளாங்கண்ணி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, இந்த கோவில், பல்வேறு சிறப்புகள் பெற்றது. இங்கு  ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதிஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவில் பல லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். இரதன் காரணமாக விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.  வேளாங்கண்ணி பண்டிகையை முன்னிட்டு 04-09-23 & 05-09-23 இரு தினங்கள் தாம்பரம் – வேளாங்கன்னி – தாம்பரம் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது.

அதுபோல, ஆகஸ்டு 14 முதல் மயிலாடுதுறை – திருவாரூர் மற்றும் திருவாரூர் – காரைக்குடி  இயக்கப்படும்  ரயில் சேவை குறித்த புதிய ரயில்வே கால அட்டவணை வெளியாகி உள்ளது

. அதுபோல தஞ்சாவூர் / கும்பகோணம் / மயிலாடுதுறை / காரைக்கால் / திருச்சி / செங்கோட்டை / அகமதாபாத் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றம் ஆகஸ்டு 14ந்தேதி (14.08.2023) முதல் அமலுக்கு வருகிறது.

மேலும், சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படவுள்ளது. இதுபோல, சென்னையில் இருந்து இயக்கப்படும் குருவாயூர் விரைவு ரயிலின் நேரமும் மாற்றப்படவுள்ளது.

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி அமைக்கப்பட உள்ளது.

7.45 மணிக்கு புறப்படும்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தாம்பரத்தை 8.13 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளியை பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக, பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சோழன் விரைவு ரயில் (22676) காலை 10.15 மணிக்கு பதிலாக, காலை 11 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு வந்தடையும்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ்: இதுதவிர, சென்னை எழும்பூர் – குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16127) காலை 9 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும். நான்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நேரம் மாற்றப்பட உள்ளது.

இந்த இரு ரயில்களின் நேரம்மாற்றம் ஆகஸ்டு. 14-ம் தேதி முதல்அமல்படுத்தப்படுகிறது. இந்ததகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.