சென்னை: மார்ச் 10ந்தேதி  வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  ஏற்கனவே 2025  டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் மார்ச் 10ந்தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.   இது ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு வேளச்சேரி – பரங்கிமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, , மார்ச் 10 முதல்  இந்த ரயில்  சேவை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பறக்கும் ரயில் திட்டத்தில், ஒரு முக்கிய மைல்கல்லாக வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையேயான ரயில் சேவை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வழித்தடத்தில் வரும் மார்ச் 10-ம் தேதி முதல் ரயில் சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையேயான இந்த ரயில் சேவை, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் பாதையுடன் ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படும்.

தற்போது தாம்பரம் – கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவைகளில் அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கூட்ட நெரிசலால் அவதிப்படும் பயணிகளுக்கு, இந்த புதிய வேளச்சேரி – பரங்கிமலை வழித்தடம் ஒரு சிறந்த மாற்றுப் பாதையாக அமையும். இதன் மூலம் பயணிகள் தடையின்றி தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தகவல்

[youtube-feed feed=1]