திருப்பதி
திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 4 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி12 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதிகாரிகள் வரும் 8-ந் தேதி நடக்கும் கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
8 ஆம் தேதி கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கேலரிகள் வசதி செய்யப்படுகிறது. பிரத்யேக வாசல்கள்அமைக்கப்பட்டு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி கருட சேவையையொட்டி 7 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,690 பேர் சாமி தரிசனம் செய்து26 ஆயிரத்து 86 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ. 4.18 கோடி காணிக்கை வசூலானது. பக்தர்கல் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.