டில்லி

கொரோனா பாதிப்பு மிதமாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் வாகன இயக்கம் குறித்து மத்திய அரசு புது விளக்கம் அளித்துள்ளது.

a

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது.   ஆயினும் கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  தற்போது நாடெங்கும் கொரோனா பாதிப்பை பொறுத்து அதிக பாதிப்பு உள்ள இடங்கள் சிவப்பு எனவும் மிதமாக பாதிப்பு உள்ள இடங்கள் ஆரஞ்சு எனவும் பாதிப்பு இல்லாத இடங்கள் பச்சை எனவும் மூன்று மண்டலமாகப் பிரிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   ஊரடங்கு விதிகளில் கொரோனா பாதிப்பை பொறுத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதில் ஆரஞ்சு மண்டலங்கள் குறித்த ஒரு புதிய விளக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன் விவரங்கள் பின் வருமாறு

ஆரஞ்சு மண்டலங்களில் நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளுடன் மாவட்டங்களுக்கு இடையிலும் மாவட்டத்தின் உட்பகுதிகளிலும் பேருந்துகள் இயக்கம் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

டாக்சிகளில் ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும்.

வாகனங்கள் மற்றும் தனி நபர்களைக் குறிப்பிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே மாநிலங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

தனி வாகனங்களிலும் ஒரு ஓட்டுநர் மற்றும் இரு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

இதைத் தவிர மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அவசியத் தேவை குறித்து மற்ற செயல்பாடுகளை அனுமதிக்கலாம்.