சென்னை

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை மிகவும் குறைந்துள்ளது.

Chennai, India-August 05, 2009:Shopping hours at Koyambedu market which is Asia’s one of largest vegetable markets August 05, 2009 in Chennai, India.

கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு, சந்தைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. இவ்வாறி காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தற்;போது மொத்த விற்பனையில் வரி கத்தரிக்காய் கிலோ ரூ.10-க்கும், அவரைக்காய் மற்றும் கொத்தவரங்காய் கிலோ ரூ.15-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.10-க்கும் விற்பனை ஆகி வருகிறது. பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

மேலும்,மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரையிலும் விற்கப்படுகிறத. கடந்த சில நாட்களாக வரத்து குறைவால் தொடர்ந்து அதிகரித்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.