ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு விசாகனுக்கும் கடந்த வாரம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போதும், எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமாக சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். குறிப்பாக சவுந்தர்யா மகன் வேத்திடம் தனது மெஹந்தி கைகளை காட்டுவது , மகன் வேத்தை தன் மடியில் அமர்த்தி விசாகனுடன் சவுந்தர்யா அமர்ந்திருக்கும் போட்டோ மிகவும் ரசனையுள்ளதாக இருந்தது.
விசாகனுடன் ஹனிமூன் போனபோது கூட மகனை பிரிந்து வந்திருக்கேன்னு வருத்தப்பட்டார் சவுந்தர்யா .
இந்நிலையில் இன்று வேத் விசாகனுடன் விளையாடும் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. கடவுள் அருள் எங்களுக்கு இருக்கிறது என பெருமிதத்துடன் கூறுகிறாள் தாய் சவுந்தர்யா