சென்னை:
தமிழகத்தில் நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட சமூக ஆர்வலரகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரியில், நேதாஜி புறவழிச்சாலையில் நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டச் செயலர் த.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி கி.கோவேந்தன், செய்தி தொடர்பாளர் த.க.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் சமூக இடைவெளியைப் பின்பற்றி முழக்கங்கள் எழுப்பினர்.
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.