நெட்டிசன்:

பா.ஜ.க. பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்களது முகநூல் பதிவு:

தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட.. பெரும் சர்ச்சையாகிப்போனதும், அவரை திராவிடக் கட்சிகள் உட்பட பல கட்சித் தலைவர்கள் கண்டனம் செய்து பேசியதும் தெரிந்த செய்தி.

இந்த நிலையில் ஒரு முக்கியமான சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி. அந்தப்பதிவ

முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த பாஜக ஆட்சியில் 1998ம் ஆண்டு , ஈ வெ ரா அவர்களின் சிலையை பாராளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

பெரியார்

அப்போதைய மத்திய அரசு பாராளுமன்றத்திற்கு இந்த கோரிக்கையை பரிந்துரைத்தது. இதற்கென ஒரு குழுவை அமைத்து சிலை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஈ வெ ரா வின் சிலை குறித்து அன்றைய தி.மு.க. அரசிடம் உடனடியாக விவரங்களை அளிக்குமாறு தெரிவித்தது. ஆனால் 2001 வரை ஆட்சியில் இருந்த தி மு க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறுபடியும் இது குறித்து மத்திய அரசு நினைவுறுத்தியது. அதன் பிறகு 2003ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு தமிழக அரசே சிலையை வடிவமைத்து கொடுக்கும் என தெரிவித்தது.

வாழப்பாடியார்

பாஜக ஆட்சிக்கு பிறகு இந்த சிலை விவகாரம் குறித்து தகவல் இல்லை.

2008ல் இந்த நடவடிக்கை காலாவதியாகி விட்டது என்று இது குறித்த கோப்புகள் சொல்வதாக தகவல்.

2006 முதல் 2011 வரை தி மு க ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. அதே போல் மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க.,  ஈ.வெ.ரா. சிலையை பாராளுமன்றத்தில் நிறுவுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த காலகட்டத்தில், பாமகவும் 10 வருடங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது என்பதும்,  வை.கோ. மற்றும் திருமாவளவன் அவர்கள் கூட இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தார்கள் என்பதையெல்லாம் மறந்து விட்டார்களா? மறைத்து விட்டார்களா?

பெரியாருடன் வாழப்பாடியார்

பதவியில் இருக்கும் போது ஈ.வெ.ராவை உதாசீனப்படுத்தியவர்கள், பதவியில் இல்லாத போது அவரை தெய்வமாக போற்றுவது அரசியல் காரணங்களுக்காக தானே? பதவி படுத்தும்பாடு இது தானா?