பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியில் வெறும் 255 வாக்குகளேப் பெற்றார் கன்னட இனவாதப் போராளியான வட்டாள் நாகராஜ். இவை நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிட மிகவும் குறைவாகும்!
கன்னட சலுவாலி வட்டாள் பக்சி என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி, இனவாத கோஷம் எழுப்பி, அதன்மூலம் நீண்டகால பிழைப்பை நடத்தி வருபவர் இந்த வட்டாள் நாகராஜ்.
காவிரி நீர் பிரச்சினை எழும்போதெல்லாம் சீனுக்கு வருவார் இந்த நாகராஜ். பெங்களூரில் அமைந்த சிவாஜி நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டார் இவர்.
இத்தொகுதியை காங்கிரஸ் நிறுத்திய ஒரு முஸ்லீம் வேட்பாளர் கைப்பற்றிவிட, நாகராஜுக்கு கிடைத்ததோ வெறும் 255 வாகுகள் மட்டுமே. ஆனால், இத்தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 986. வட்டாள் நாகராஜின் இந்தத் தோல்வி பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.