வாடிகன்: சிறுநீரக பாதிப்பு, சுவாசக்கோளாறு போன்ற நோய்களின் பாதிப்பால் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும், கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ். இவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்ற வரும் நிலையில், சமீப காலமாக சுவாசம் விடுவதில் கஷ்டப்பட்டு வருகிறார். இதையடுத்து, கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவரது நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனழே நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாக சுவாச பிரச்சினையால் அவதியுற்று வரும் போப் பிரான்சிஸ்-க்கு சிறுநீரக பாதிப்பும் எற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
Vatican city, Pope Francis, வாடிகன் தேவாலயம், போப் பிரான்சிஸ்,