டெல்லி: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வசந்தகுமார் எம்.பி, கொரோனாவில் இருந்து விடுபட்ட நிலையில், மற்ற நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டிருந்தார், அதில்,
கோவிட் -19 காரணமாக கன்னியாகுமரி எம்.பி., ஸ்ரீ எச் வசந்தகுமாரின் அகால மரணம் பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதற்கான காங்கிரஸ் சித்தாந்தத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மனமார்ந்த இரங்கல் என கூறியிருந்தார்.
இநத நிலையில், அவரது மனைவி தமிழ்ச்செல்விக்கு ராகுல்காந்தி,இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
அதில்,
அன்புள்ள திருமதி. தமிழ் செல்வி,
–
வசந்தகுமாரின் அகால மரணத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். நாங்கள் ஒரு புகழ்பெற்ற தலைவரை இழந்துவிட்டோம். அவர், காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு உறுதியளித்தார். குறிப்பிட்டத்தக்க தொழில்முனைவோராகவும், அரசியல் பயணம், பொது சேவைக்கு அவர் அளித்த உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் பரோபகாரம் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவியது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் உண்டு.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.